×

டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: நார்வே செஸ் தொடரில் முற்றிலும் வியக்கத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் இளம் வீரர் பிரக்ஞானந்தா. மூன்றாம் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மேக்னஸ் கார்லசனை வென்றதோடு, தற்போது ஐந்தாம் சுற்றில் உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரரான பேபியானோ கருவானாவையும் ‘கிளாசிக்கல் செஸ்’ வகைப் போட்டியில் வீழ்த்தியிருப்பது என்பது மிகப்பெரும் சாதனையாகும். டாப்-10 தரவரிசைக்குள் நுழைந்திருக்கும் உங்கள் (பிரக்ஞானந்தா) வரவு நல்வரவாகட்டும், ஒட்டுமொத்த செஸ் உலகமும் உங்களின் திறனையும் சாமர்த்தியத்தையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

The post டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Pragnananda ,Chennai ,M.K. Stalin ,M.K.Stalin ,
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...