×

கூடுதல் விலைக்கு மது விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் சஸ்பெண்ட்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முழுவதும் 70 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மது வகைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை காட்டிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், சில கடைகளில் தண்ணீர் கலந்தும், புகையிலை பொருட்கள் ஊற வைக்கப்பட்ட தண்ணீர் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. ஊட்டி நகரில் உள்ள சில கடைகளில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஊட்டி ஜி1 காவல் நிலையம் எதிரே உள்ள மதுபான கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் உட்பட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதேபோல் மெயின் பஜார் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையிலும் அதிக விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக இரு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

The post கூடுதல் விலைக்கு மது விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Nilgiris district ,
× RELATED மஞ்சாலுமூடு டாஸ்மாக் கடையில் சிறுமிக்கு மது வாங்கி கொடுத்த தாய்