×

கருத்துக்கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பே வீட்டில் உட்கார்ந்து தயாரித்தவை: மம்தா விமர்சனம்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அளித்த பேட்டி: தற்போது வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த கணிப்புகள் எல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்பே வீட்டில் உட்கார்ந்து தயாரிக்கப்பட்டவை. இதனால்தான் அவை கள நிலவரத்துடன் ஒத்துப்போகவில்லை. கடந்த 2016, 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இதுபோன்ற கருத்துக்கணிப்புகள் எவ்வாறு நடத்தப்பட்டன என்பதை நாங்கள் பார்த்தோம்.

அப்போது, அந்த கருத்து கணிப்புகள் எல்லாம் போலியானவை என்பதை தேர்தல் முடிவுகள் வெட்ட வௌிச்சமாக்கியது. இந்தியா கூட்டணியில் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரது கட்சிகள் சிறப்பான வெற்றியை பெறும். மாநில கட்சிகளுக்கு எல்லா இடங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும் என்றார்.

 

The post கருத்துக்கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பே வீட்டில் உட்கார்ந்து தயாரித்தவை: மம்தா விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Mamta ,Kolkata ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,Mamata ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில்...