×

தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வழக்கமாக வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் வெயிலானது இந்த ஆண்டு தமிழ்நாட்டிலும் கால்பதித்துள்ளது. வழக்கத்திற்கு மாறான கோடை வெயிலை தாங்க முடியாமல் பொதுமக்களும், உயிர்ப் பிராணிகளும் தவித்து வருகின்றனர். கத்திரி வெயில் முடிந்தாலும், சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் சற்றும் குறையவில்லை. இதனால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருநெல்வேலி, கோவை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : DARUMPURI ,SALEM ,Chennai ,Tamil Nadu ,Krishnagiri ,Meteorological Survey Centre ,Weather ,
× RELATED மக்களவை தேர்தல்: தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி அபார வெற்றி