×

ஊராட்சி செயலாளர் மீது தாக்குதல் பெண்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு சேத்துப்பட்டு ஒன்றியத்தில்

சேத்துப்பட்டு, ஜூன் 2: சேத்துப்பட்டு ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளரை பணி செய்ய விடாமல் தாக்கி அவதூறாக பேசிய 4 பெண்கள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் புதிய குளம் வெட்டும் பணியை நேற்று ஊராட்சி செயலாளர் பிரபாகரன் பார்வையிட சென்றார். அப்போது, அவரை பணி செய்ய விடாமல் அதே ஊராட்சியில் பணிதளப் பொறுப்பாளராக உள்ள அனுசுயா, பூங்கோதை, விஜயலட்சுமி, சசிகலா, சீனு, பழனி ஆகியோர் தகராறு செய்தனர். இதில் அனுசுயா, பிரபாகரன் கன்னத்தில் பளார் என அறைந்தாராம். மற்ற அனைவரும் அவதூறான வார்த்தைகளால் அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து பிரபாகரன் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணியிடம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) இந்திராணி நேற்று புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், அரசு பணி செய்வதை தடுத்த 4 பெண்கள் உள்பட 6 பேர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஊராட்சி செயலாளர் மீது தாக்குதல் பெண்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு சேத்துப்பட்டு ஒன்றியத்தில் appeared first on Dinakaran.

Tags : Panchayat Secretary ,Chethupattu ,Panchayat ,Thiruvannamalai District ,Sethupattu ,Chethupattu Union ,
× RELATED துணை பிடிஓ.,க்களுக்கு பிடிஓவாக பதவி உயர்வு