×

காகித ஆலை தொமுச நிர்வாகிகள் தேர்தல்

பள்ளிபாளையம், ஜூன்.2: காகித ஆலை திமுக தொழிற்சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் முன்னாள் மாவட்ட திமுக துணைச்செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பள்ளிபாளையம் காகித ஆலையின் திமுக தொழிற்சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் ஆலையின் தொமுச சங்க உறுப்பினர்கள் வாக்களித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். சங்கத்தின் தலைவராக வெங்கடேசன், துணைத்தலைவர்களாக ஞானசுந்தரம், அருணாச்சலம், தினகரன், பொதுச்செயலாளராக சுப்பிரமணியம், துணைச் செயலாளர்களாக கார்த்திகேயன், நாகராசன், அன்பரசு, பொருளாளராக ஹரிபாபு ஆகியோர் வெற்றி பெற்றனர். புதிய தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னாள் மாவட்ட திமுக துணைச்செயலாளர் வெப்படை செல்வராஜை, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். புதிய நிர்வாகிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

The post காகித ஆலை தொமுச நிர்வாகிகள் தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Paper Mill ,Thomus ,Pallipalayam ,DMK ,Pallipalayam paper mill ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காகித ஆலையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி