×

போலி உரம், பூச்சிக்கொல்லி மருந்து விற்றால் லைசென்ஸ் ரத்து ஈரோடு மாவட்டத்தில் வேளாண் அதிகாரிகள் எச்சரிக்கை லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

 

ஈரோடு, ஜூன் 2: போலி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், மக்காச்சோளம், தென்னை, வாழை, மரவள்ளி, வெங்காயம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை விவசாயம் மற்றும் அங்கக வேளாண்மைக்கு அரசு முக்கியத்துவம் அளித்து ஊக்குவித்து வருகிறது. விவசாயிகள், சாகுபடி பயிர்களுக்கு, அதிகளவில் இயற்கை உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதன் மூலம், நிலம் மற்றும் சுற்றுப்புறம் மாசுபடுவதை தவிர்ப்பதோடு, மண் வளத்தை மேம்படுத்துவதுடன், உற்பத்தி செலவையும் குறைக்கலாம். உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்கும்போது, உரிமம் பெற்ற உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனையாளர்களிடம், உரிய விற்பனை ரசீது பெற்று வாங்க வேண்டும். போலி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்தாலோ அல்லது அதிக விலைக்கு விற்றாலோ, சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post போலி உரம், பூச்சிக்கொல்லி மருந்து விற்றால் லைசென்ஸ் ரத்து ஈரோடு மாவட்டத்தில் வேளாண் அதிகாரிகள் எச்சரிக்கை லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode district ,Erode ,
× RELATED அரசு பஸ்சில் இருந்து முதியவரை தாக்கி...