×

வெளி மாவட்டங்களுக்கு வைக்கோல் விற்பனை இடித்து அகற்ற கோரிக்கை வல்லம் பகுதியில் கனமழை

 

வல்லம், ஜூன் 2: தஞ்சாவூர் அருகே வல்லம் பகுதியில் நேற்று திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. தஞ்சாவூர் அருகே வல்லம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்நிலையில் நேற்று மாலை இடி மற்றும் பலத்த காற்றுடன் சுமார் முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர் காற்று வீசியது.

வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட பொது மக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் நடந்து வருகிறது. மேலும் ஒரு சில பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாமலே உள்ளது.

The post வெளி மாவட்டங்களுக்கு வைக்கோல் விற்பனை இடித்து அகற்ற கோரிக்கை வல்லம் பகுதியில் கனமழை appeared first on Dinakaran.

Tags : Vallam ,Thanjavur ,Dinakaran ,
× RELATED சொட்டுநீர் பாசனத்தில் விளைந்த நிலக்கடலை அறுவடை மும்முரம்