×

முன் பட்ட குறுவை அறுவடை பணிகள் மும்முரம் தஞ்சாவூரில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

 

தஞ்சாவூர், ஜூன் 2: தஞ்சாவூரில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சைநாஞ்சிக்கோட்டை ரோடு சிட்கோ அருகே கஞ்சா வைத்திருப்பதாக தஞ்சை தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பர்மாகாலனி பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன்( 26), ஈ.பி.காலனி சுந்தரம்நகரை சேர்ந்த குமரன் மகன் போஜராஜன்(26), அதே பகுதியை சேர்ந்த ஜான் சகாயராஜ் மகன் ஜான் ஜெயபிரகாஷ்(27) ஆகிய மூன்று பேர் என்பதும், 1 கிலோ 10 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்ததுடன், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post முன் பட்ட குறுவை அறுவடை பணிகள் மும்முரம் தஞ்சாவூரில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur South Police ,Thanjainanchikottai Road Citco ,Sub-Inspector ,Satyanathan ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக...