×

மாணவர் சங்க முன்னணி ஊழியர்களுக்கான பயிலரங்கு

 

புதுக்கோட்டை, ஜூன் 2: இந்திய மாணவர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட முன்னணி ஊழியர்களுக்கான ஒருநாள் பயிலரங்கு நடைபெற்றது. பயிலரங்கிற்கு மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சந்தோஷ் தலைமை வகித்தார். ‘சங்க அமைப்பின் வரலாறு’ என்ற தலைப்பில் மாநில செயலாளர் அரவிந்தசாமி, ‘இந்திய அரசியல் வரலாற்றில் மாணவர்களின் பங்கு’ என்ற தலைப்பில் கவிஞர் கவிவர்மன், ‘சமூக வலைதளத்தின் முக்கியம்’ என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் அமுல் காஸ்ட்ரோ ஆகியோர் உரையாற்றினர். இந்திய அரசியல் கட்சிகள் குறித்து சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜன், எதிர்கால திட்டமிடல் குறித்து சங்க மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திகாதேவி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

The post மாணவர் சங்க முன்னணி ஊழியர்களுக்கான பயிலரங்கு appeared first on Dinakaran.

Tags : Student ,Union Front ,Pudukottai ,Indian Students Union ,Santhosh ,District Secretary ,Students Union ,State Secretary ,Aravindaswamy ,Student Union ,Front ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி...