×

சீரமைக்க கோரிக்கை 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்க வேண்டும்

 

பெரம்பலூர், ஜூன் 2: ஓய்வூதியர்களில் 70 வயது ஆனவர்களுக்கு 10 சதவிகித ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தமிழ்நாடு ஓய் வூதியர் சங்கத்தின் பெரம் பலூர் மாவட்ட மாதாந்திரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட மாதாந்திரக் கூட்டம் நேற்று (1ம்தேதி) காலை 10.30 மணிக்கு தனியார் கட்டிடத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. சிங்கபெருமாள் முன் னிலை வகித்தார். செல்வராசு வரவேற்றார். ஓவியர் முகுந்தன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் சீத்தாராமனின் 75வது பிறந்தநாள் மற்றும் 9 உறுப்பினர்களின் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கப் பட்டது. மேலும் சங்கத்தின் சட்டவிதிகள் திருத்தம் குறித்து விவாதித்து மாநில மையத்திற்கு பரிந் துரை செய்யப்பட்டது. மாநில அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை விரைவில் அறிவிக்க வேண்டும், ஓய்வூதியர்களில் 70 வயதை கடந்தவர்களுக்கு 10 சதவி கித ஊதிய உயர்வு வங்க வேண்டும் என தமிழக அர சுக்குக் கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

The post சீரமைக்க கோரிக்கை 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Peram Balur ,Tamil Nadu Oi Vudiyar Sangh ,Tamil Nadu Pensioners Association ,
× RELATED மேம்பாலத்தில் உறுதிதன்மை பரிசோதனை