×

அரியலூர் மாவட்டத்தில் நாளை கலைஞர் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்

 

அரியலூர், ஜூன் 2: அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 101வது பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் கேட்டுக்கொண்டார். அரியலூர் திமுக மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு, ஜூன் 3-ம் தேதி மறைந்த திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் 101 – வது பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

The post அரியலூர் மாவட்டத்தில் நாளை கலைஞர் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ariyalur district ,Ariyalur ,Minister ,Sivashankar ,chief minister ,DMK district ,district ,Dinakaran ,
× RELATED இணையவழியில் நத்தம் பட்டா மாறுதல்...