×

அனைத்து முன்னேற்பாடு பணிகள் தயார் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை

 

குன்னம், ஜுன் 2: வேப்பூர் அரசு கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 10ம்தேதி முதல் துவங்க உள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25 ம் ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவிகள் சேர்க்கை 10.6.2024 முதல் 15.6.2024 வரை முதல் கட்ட பொதுக்கலந்தாய்வும், 24.6.2024 முதல் 29.6.2024 வரை இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வும் காலை 10.00 மணி அளவில் TNGASA இணையதளம் வழியாக நடைபெறும். பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.பி.ஏ.(வணிக நிர்வாகவியல்), பி.காம். (வணிகவியல்), பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. இயற்பியல், பி.எஸ்சி வேதியியல், பி.எஸ்சி உயிர்த் தொழில் நுட்பவியல் மற்றும் பி.எஸ்சி.கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவிகள் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் மணிமேகலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post அனைத்து முன்னேற்பாடு பணிகள் தயார் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Government Women's College ,Gunnam ,Principal ,Veypur Government College ,Perambalur District ,Gunnam Circle ,Govt. Women Arts and Science College ,Veypur ,Govt. Women's College ,Dinakaran ,
× RELATED வேப்பூர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி