×

திருப்புவனம் அருகே சோகம் 6 மாத கைக்குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை

திருப்புவனம்: திருப்புவனம் அருகே 6 மாத கைக் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (38). நிலங்களுக்கு வேலி அமைக்கும் தொழிலில் செய்து வருகிறார். இவருக்கு அழகுமீனா (34) என்ற மனைவியும் 6 மாதத்தில் வேதாஸ்ரீ என்ற பெண் குழந்தையும் இருந்தனர். குழந்தைக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த அழகுமீனா நேற்று அதிகாலை 3 மணியளவில் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு, திடீரென வீட்டின் அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு சென்றார்.

அங்கு தனது உடலிலும், குழந்தையின் உடலிலும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதனால் வலி தாங்க முடியாமல் தாயும், குழந்தையும் அலறினர். சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் தீயை அணைத்தனர். பின்னர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தை இறந்தது. மேல் சிகிச்சைக்காக அழகுமீனா மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆவதால் மதுரை ஆர்டிஓ விசாரணையும் நடைபெற உள்ளது.

The post திருப்புவனம் அருகே சோகம் 6 மாத கைக்குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruppuvanam ,Murugan ,Velayapatti ,Sivagangai district ,
× RELATED பக்ரீத் பண்டிகையால் களைகட்டிய...