×

மோடியின் தியானம் மறைமுக தேர்தல் யுக்தி: வைகைச்செல்வன் கடும் தாக்கு

கொடைக்கானல்: மறைமுக தேர்தல் யுக்திக்காகவே பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தார் என முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அண்ணாமலை விளம்பரத்திற்காகவும் பரபரப்புக்காகவுமே பேசி வருகிறார். அதிமுகவை அணைய போகின்ற விளக்கு என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். அதிமுக என்றும் அணையாத விளக்காகவே உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

இறை நம்பிக்கை வேறு, இந்துத்துவா கொள்கை வேறு. அவர் இந்துத்துவா தலைவர் அல்ல. மத துவேசத்தையும், மதவெறியையும் ஆர்எஸ்எஸ் போன்ற ஆதிக்க சக்தி இந்திய மண்ணில் விதைத்து கொண்டுள்ளது. இதை ஏற்க முடியாது.
தமிழ்நாடு பெரியார் மண். அண்ணாமலை நேற்றைய வரவு. அவரால் ஒன்றும் செய்ய முடியாது. அவரது விமர்சனம் ஒரு பொருட்டு அல்ல. வான் புகழ் கொண்ட வள்ளுவனுக்கு தமிழ்நாடு ஆளுநர் காவி சாயம் பூசி வருகிறார். சாயாத சரித்திரத்தை கொண்ட வள்ளுவனை சாயம் தான் என்ன செய்ய முடியும்? பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தது தேர்தலின் மறைமுக யுக்திக்காகத்தான். நடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜ மூன்றாவது இடத்தைத் பிடித்தால் அதிசயம். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post மோடியின் தியானம் மறைமுக தேர்தல் யுக்தி: வைகைச்செல்வன் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Vaikachelvan ,Kodaikanal ,Former Minister ,Vaikaichelvan ,Vivekananda ,AIADMK ,Vaikai Selvan ,Dindigul ,Annamalai ,
× RELATED மோடி அரசால் சீரழிக்கப்பட்ட...