×

எம்பிபிஎஸ் மாணவி மாயம்

சேலம், ஜூன் 1: சேலம் அருகேயுள்ள தனியார் மருத்துவகல்லூரியில் புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஒருவர், எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்துவந்தார். கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தார். நேற்று அவருக்கு முக்கியமான தேர்வு இருந்தது. ஆனால், அதில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்று பார்த்தபோது, அவர் அங்கு இல்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. பின்னர் கல்லூரி நிர்வாகிகள், அவரது பெற்றோரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ஊருக்கும் அவர் செல்ல வில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து கல்லூரியின் டீன், ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post எம்பிபிஎஸ் மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : MBBS ,Mayam ,Salem ,Pudukottai ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி