×

₹10ஆயிரம் அபேஸ் செய்த வாலிபர் கைது

சேலம், ஜூன் 1: சேலம் திருவாகவுண்டனூர் பகுதியில், பிரபல பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் கிளை அலுவகலம் ஈரோட்டில் இருக்கிறது. அங்கு கடந்த 13ம்தேதி, வசூலான ₹2 லட்சத்தை ஊழியரான அஸ்தம்பட்டியை சேர்ந்த உசேன்(23) என்பவரிடம் கொடுத்து அனுப்பினர். அப்போது, அங்கிருந்த சிசிடிவி கேமரா முன்னிலையில் பார்சல் செய்து அனுப்பியுள்ளனர். பணத்தை கொண்டு வந்து, சேலம் அலுவலக மேலாளர் வினோத்(28) என்பவரிடம் கொடுத்தார். அவர் பணத்தை எண்ணி பார்த்தபோது, ₹10 ஆயிரம் குறைவாக இருந்தது தெரியவந்தது. என்னிடம் அவ்வளவு பணம் தான் கொடுத்தனர் என உசேன் தெரிவித்தார். இதுகுறித்து வினோத், சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ₹10ஆயிரம் அபேஸ் செய்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Thiruvagoundanur ,Erode ,Usain ,Astampatti.… ,Dinakaran ,
× RELATED கரும்பு விளைச்சல் பாதிப்பால் வெல்லம்...