×

ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல், ஜூன் 1: நாமக்கல் மாவட்டத்தில் ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து, பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் வகையில், மாநில அளவில் 2 சிறந்த கிராமப்புற பகுதியைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு, சிறப்பு விருது மற்றும் தலா ₹1 லட்சம், ₹2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2023-24ம் ஆண்டிற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை, தமிழக அரசின் அறிவியல் நகரம் வரவேற்கிறது. விண்ணப்பப்படிவம், விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல் குறிப்புகள் ஆகியவற்றை அறிவியல் நகர இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் மூலம் அறிவியல் நகரத்திற்கு வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன் வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Uma ,Dinakaran ,
× RELATED போட்டியாளர்களுக்கு இலவச பயிற்சி