×

4ம் தேதி மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

நாமக்கல், ஜூன் 1: நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 4ம் தேதி டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று காலை முதல் இரவு வரை நாள் முழுவதும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும், லைசென்ஸ் பெற்ற பார்களும் மூடி வைக்க வேண்டும். விதிமுறைகளை மீறி மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post 4ம் தேதி மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,TASMAC ,Uma ,Dinakaran ,
× RELATED ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்