×

கோலம் போட்ட மூதாட்டி பைக் மோதி பரிதாப சாவு

மதுரை, ஜூன் 1: அனுப்பானடி பாபு நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் திலகவதி(62). இவர் சம்பவத்தன்று காலையில் வீட்டு வாசலை சுத்தம் செய்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த மூதாட்டி திலகவதியை 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசென்று மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது உறவினர் பிரபு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பைக்கில் மோதிவிட்டு சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோலம் போட்ட மூதாட்டி பைக் மோதி பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Kolam Bata ,Madurai ,Thilagawati ,Anuppanadi Babu Nagar Main Road ,Kolam Bota ,Paritapa Shavu ,
× RELATED மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!