×

தனியாக பயணம் செய்கின்ற பெண்களின் பாதுகாப்பிற்காக செல்போன் எண், முகவரி சேகரிப்பு

 

பாலக்காடு,ஜூன்1: பாலக்காடு மண்டல ரயில்வே அலுவலகம் சார்பில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு நலன்கருதி அவர்களது பெயர்,ஊர்,செல்போன் எண் ஆகியவற்றை சேகரிக்கும் திட்டத்தை ரயில்வே பாதுகாப்புப்படை அறிமுகப்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு சந்திப்பு, ஷொர்ணூர் சந்திப்பு, கண்ணூர், மங்களூரூ சென்ட்ரல், மங்களூரூ சந்திப்பு ஆகிய ரயில் நிலையங்களிலாக 23 ரயில்களில் 59 திறமை மிக்க பெண் போலீசார் இரவு நேர பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ரயில்களில் இரவு நேரங்களில் தனியாக பயணிக்கக்கூடிய பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். தனியாக பயணிக்கின்ற பெண்களின் பெயர்,ஊர், மொபைல் நம்பர் ஆகியவை சேகரித்து அவர்கள் வீடுகள் சென்றவுடன் தெரிவிக்கும்மாறு அறிவுரை வழங்கி உள்ளனர். ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக 139 என் அவசர நம்பருக்கு கூப்பிடுமாறு அவசரக்கால நம்பர்களையும் வழங்கி வருகின்றனர். இதற்காக இரவு நேரங்களில் பயணிகளை தூக்கத்திலிருந்து எழுப்பி பெண் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். அவர்களுடன் பயணிக்கும் ஆண்களிடமும் தகவல்கள் சேகரித்து வருகின்றனர். இரவில் தனியாக பயணிக்கின்ற பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பவர்களை கூடுதல் கவனத்துடன் கண்காணித்து உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தும் வருகின்றனர்.

The post தனியாக பயணம் செய்கின்ற பெண்களின் பாதுகாப்பிற்காக செல்போன் எண், முகவரி சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Palakkad Zonal Railway Office ,Railway Security Force ,Kerala State ,Palakkad Junction ,Shornur Junction ,Kannur ,Mangalore ,Dinakaran ,
× RELATED அரசு வேலை வாங்கித்தருவதாக ஓய்வுபெற்ற...