×

வாட்ஸ் அப் மூலம் லாட்டரி விற்ற 4 பேர் கைது

 

கோவை, மே ஜூன் 1: கோவை அடுத்த துடியலூர் போலீசார் துடியலூர்- சரவணம்பட்டி ரோடு வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள கோயில் அருகே நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கேரள லாட்டரி மற்றும் 3ம் நம்பர் சீட்டுகளை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. மேற்கொண்ட விசாரணையில், 4 பேரும் வாட்ஸ் ஆப் குழு அமைத்து ஏஜெண்ட் மூலம் லாட்டரி விற்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் லாட்டரி சீட்டுகளை விற்ற கோவை கவுண்டர் மில் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (39), பிரதீப் (34), வெள்ளக்கிணறு சதீஷ்குமார் (39) மற்றும் நல்லாம்பாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த ஆதீஷ் கண்ணன் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான பிரபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைதானவர்களிடமிருந்து ரூ.1.61 லட்சம், 96 லாட்டரி சீட்டுகள், ஒரு கார், 5 லேப்டாப், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான முக்கிய குற்றவாளி பிரபுவின் ரூ.18 லட்சம் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.

The post வாட்ஸ் அப் மூலம் லாட்டரி விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Coimbatore ,Dudiyalur ,Vellakinaru ,Dudiyalur-Saravanampatti road ,Kerala ,
× RELATED வாட்ஸ் ஆப், டெலிகிராம் குறுந்தகவலா?...