×

போக்குவரத்து துறை இணை ஆணையர் ஓய்வு பெறும் நாளில் அதிரடி சஸ்பெண்ட்

திருச்சி: சென்னையில் உள்ள போக்குவரத்து துறை தலைமை அலுவலகத்தில் மேலாண்மை பிரிவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிகாரியாக பணியாற்றியவர் வெங்கட்ராமன். இவர், பணியில் இருந்த போது லஞ்ச ஒழிப்புதுறையினர் நடத்திய அதிரடி சோதனையில் மேலாண்மை பிரிவு அதிகாரி நடராஜ் என்பவரது அறையில் வெங்கட்ராமனும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இவரது பெயரும் இணைக்கப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புதுறை அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், தற்போது வெங்கட்ராமன் திருச்சி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்கள் அடங்கிய ரங்கம் கோட்டத்துக்கு உட்பட்ட போக்குவரத்து இணை ஆணையராக (செயலாக்கம்) பணியாற்றி வந்தார். இந்நிலையில், தமிழக அரசு வெங்கடராமனை, பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது. தன்னுடைய பணிக்காலம் முடிந்து நேற்று ஓய்வு பெற இருந்த நிலையில் இணை போக்குவரத்து ஆணையர் வெங்கட்ராமனை சஸ்பெண்ட் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post போக்குவரத்து துறை இணை ஆணையர் ஓய்வு பெறும் நாளில் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Department of Transport ,Trichy ,Venkatraman ,Chennai ,Nataraj ,Anti-Bribery Department ,Dinakaran ,
× RELATED பக்ரீத் விடுமுறை எதிரொலி.! வெளிமாநில...