×

இஎம்ஐ கட்டாததால் ஸ்கூட்டர் பறிமுதல் வங்கியில் கதறி அழுது வாலிபர் தர்ணா

ஈரோடு மோளகவுண்டபாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மகன் தரணி தரன் (18). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீரப்பன்சத்திரத்தில் உள்ள இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தில்
ரூ.5 ஆயிரம் முன் பணம் செலுத்தி தனியார் வங்கியில் கடனுதவி மூலம் ரூ.98 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டரை வாங்கினார். மாதந்தோறும் ரூ.3 ஆயிரத்து 800 செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் முதல் மாத தவணை தொகையை தரணிதரன் செலுத்தினார். பின்னர், கடந்த 2 மாதங்களாக தவணை தொகை செலுத்தாததால் வங்கி ஊழியர்கள் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், வங்கிக்கு நேற்று முன்தினம் சென்ற தரணிதரன் தவணைத் தொகையை செலுத்துவதாகவும், ஸ்கூட்டரை வழங்கும்படியும் கேட்டுள்ளார். ஆனால், ஸ்கூட்டரை வங்கி ஊழியர்கள் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தரணிதரன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். வங்கி முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மார்பில் அடித்தபடி அவர் அழுததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

The post இஎம்ஐ கட்டாததால் ஸ்கூட்டர் பறிமுதல் வங்கியில் கதறி அழுது வாலிபர் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Chiddavel ,Molagoundapalayam ,Erode ,Dharani Taran ,Veerappanchatra ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு