×

அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களை நியமிக்கலாம்: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தாங்களாகவே ஆசிரியர்களை நியமிக்க முழு உரிமை உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி தமிழ் கல்வி சங்கம் நடத்தும் பள்ளிகளில் 6,879 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளிகளில் காலியாக உள்ள 52 இடங்களை நேரடியாக நிரப்ப கல்வித்துறை அனுமதி வழங்கவில்லை.

இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீஹரிசங்கர் அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான அளவுக்கு ஆசிரியர், பள்ளி தலைவர்களை தேர்வு செய்ய முழு உரிமை இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆசிரியர் நியமனத்துக்காக அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும் ஆசிரியர்களுக்கான தகுதி மற்றும் அனுபவ காலத்தை வகுப்பது மட்டுமே கல்வித்துறையின் பணி என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த உத்தரவினால் கல்வி நிறுவங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவியை அரசு நிறுத்தவோ, குறைக்கவோ கூடாது என்றும் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்றும் ஆய்வு செய்ய அரசுக்கு உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

The post அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களை நியமிக்கலாம்: டெல்லி உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,Delhi ,Delhi Tamil Education Association ,Dinakaran ,
× RELATED ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில்...