×

பாலக்காடு அருகே சில்லிக் கொம்பன் யானை முகாம்: தோட்ட தொழிலாளர்கள் அச்சம்


பாலக்காடு: பாலக்காடு அருகே முகாமிட்டுள்ள சில்லிக் கொம்பன் யானையால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் நெம்மாராவை அடுத்த நெல்லியாம்பதியில் சில்லிக்கொம்பன் யானை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ளது. நேற்றுமுன்தினம் அங்குள்ள கூனம்பாலம் பகுதியில் மாமரத்தில் உள்ள மாம்பழங்களை பறித்து சாப்பிட்டுள்ளது.இதனால் எஸ்டேட் தொழிலாளர்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகினர். வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனத்துக்குள் விரட்டி அடித்தனர்.

இருப்பினும் சிறிது நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய யானை அருகில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து அங்குள்ள தென்னை,வாழை, மா, பலா மரங்களை துவம்சம் செய்தது. நெல்லியாம்பதி மலை சாலையில் வாகனங்களை வழிமறித்து வாகனங்களில் வருபவர்களை அச்சுறுத்தியது. இதனால் நெல்லியாம்பதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது.தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சில்லிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் அல்லது வனத்துக்குள் விரட்டியடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாலக்காடு அருகே சில்லிக் கொம்பன் யானை முகாம்: தோட்ட தொழிலாளர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Cillik Kompan ,Palakkad ,Cilic Kompan ,Kerala State ,Palakkad District ,Nemmara ,Chillikompan ,Marat ,Kunampalam ,Cillik ,Kompan ,Dinakaran ,
× RELATED பாலக்காடு நகராட்சி 6வது வார்டில்...