×

ஜூன் 11-ல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை: ஜூன் 11-ல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தவுள்ளார். தேர்தல் நடத்தை விதி முடிவுக்கு வந்த பின், அரசின் புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். ஜூன் 11-ல் தொடங்கி வெவ்வேறு தேதிகளில் 4 நாட்கள் நடக்கும் கூட்டம் ஜூன் 19-ல் நிறைவடைகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

ஜூன் 11-ல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஜூன் 13ல் திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை , கடலூர் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஜூன் 15ல் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

The post ஜூன் 11-ல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Chennai ,Dinakaran ,
× RELATED பள்ளிகளில் மாணவர்கள் மன அழுத்தம்...