×

தேனி அருகே ஏடிஎம் மிஷினில் திருட்டு முயற்சி

தேனி, மே 31: தேனி அருகே தப்புக்குண்டில் தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இதன் மேற்பார்வையாளராக தேனி சுப்பன் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் வெங்கடேசன் (55) உள்ளார். இம்மையத்தை நேற்று தூய்மை செய்வதற்காக வந்த துப்புரவு பணியாளர் அமராவதி, ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டது போல உள்ளது என மேற்பார்வையாளர் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வெங்கடேசன் அங்கு வந்து பார்வையிட்டு, இம்மையத்தில் பணம் நிரப்பும் தனியார் ஏஜெண்டுகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் வந்து பார்த்தபோது இயந்திரத்தில் பணம் வைக்கும் பகுதி உடைக்கப்படவில்லை என்றும் பணம் திருடுவதற்கு சிலர் முயற்சித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஏடிஎம் மைய மேற்பார்வையாளர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மையத்தை பார்வையிட்டனர். பின்னர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் திருட முயன்ற மர்ம நபர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இம்மையத்தில் காவலாளியோ அல்லது அலாரமோ இல்லாத நிலையில், இச்சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தேனி அருகே ஏடிஎம் மிஷினில் திருட்டு முயற்சி appeared first on Dinakaran.

Tags : Theni ,Tappkund ,Srinivasan ,Venkatesan ,Theni Subpan Street ,Amaravathi ,Dinakaran ,
× RELATED பாமாயில், பருப்பு வாங்காதவர்கள் 30ம் தேதிக்குள் பெறலாம்