×

கோயில் திருவிழாக்களால் செண்டு பூ விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

 

சின்னமனூர், மே 31: கோயில் திருவிழாக்கள் காரணமாக, செண்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சின்னமனூர் பகுதியில் அய்யம்பட்டி, சீலையம்பட்டி, மேலபூலானந்தபுரம், கோயில்பட்டி, சமத்துவபுரம், பூமலைக்குண்டு, வேப்பம்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் பூக்கள் பயிரிட்டு வருகின்றனர். கோடை காலம் துவங்கிய நிலையில் பூக்களின் வரத்து குறைந்து தேவை அதிகரித்தது.

இதனால் மல்லிகை, ரோஜா, பிச்சி, செண்டு பூ, கொண்டை பூ, சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் விலை உயர்ந்தது. மேலும் வைகாசி மாதத்தில் அம்மன் கோயில் திருவிழாக்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால் பூக்களின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக வழக்கமாக கிலோ ரூ.20க்கு விற்பயைாகும் செண்டு பூ, கடந்த மாதம் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையானது. ஆனால் தற்போது அவற்றின் விலை மேலும் உயர்ந்து கிலோ ரூ.120 முதல் 130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கோயில் திருவிழாக்களால் செண்டு பூ விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Ayyambatti ,Seelaiyambatti ,Melaboolanandapuram ,Koilpatti ,Samathuvapuram ,Bhoomalaikundu ,Vepampatti ,Kottur ,
× RELATED கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்