×

வெள்ளிச்சந்தை அருகே 2 குழந்தைகளின் தாய் மாயம் கணவர் போலீசில் புகார்

 

குளச்சல்,மே 31: வெள்ளிச்சந்தை அருகே அம்மாண்டிவிளையை சேர்ந்தவர் அருள்லிங்கம் (34). கொத்தனார். அவரது மனைவி மகேஸ்வரி (32). இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக அருள்லிங்கம் நெல்லை மாவட்டம் திருவைகுண்டத்தில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இதனால் மகேஸ்வரி ஈத்தன்காட்டில் உள்ள தனது அக்கா வீட்டில் 2 பிள்ளைகளுடன் தங்கியிருந்தார்.

சம்பவத்தன்று கடைக்கு சென்று வருவதாக அக்கா வீட்டில் கூறிவிட்டு சென்ற மகேஸ்வரி இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. உடனே அவரது அக்கா உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் மகேஸ்வரி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து திருவைகுண்டத்தில் வேலை பார்க்கும் அவரது கணவன் அருள்லிங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே ஊர் திரும்பி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மகேஸ்வரியை தேடி வருகின்றனர்.

The post வெள்ளிச்சந்தை அருகே 2 குழந்தைகளின் தாய் மாயம் கணவர் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Velli market ,Kulachal ,Arullingam ,Ammandivilai ,Vellichandi ,Mason ,Maheshwari ,Thiruvaikunda, Nellai district ,
× RELATED கள்ளக்கடல் எச்சரிக்கை எதிரொலி...