×

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு

 

கோவை, மே 31: கோவை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 27 உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இந்த கலந்தாய்வு கோவை ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமையில் நடந்தது. இதில், கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி, சிறப்பாசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 31 பேர் பங்கேற்றனர். இவர்களில் 27 பேர் தாங்கள் விரும்பிய பள்ளிகளை தேர்வு செய்தனர்.

The post அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Rajaveedee Cloth Merchants Association ,Government Girls Higher Secondary School ,Dinakaran ,
× RELATED 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற...