×

சென்னையில் பெரும் பரபரப்பு: பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் பயங்கர தீ

 

வேளச்சேரி, மே 31: பெரும்பாக்கம் சதுப்பு நிலம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய போராடி தீயை அணைத்தனர். வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் – சோழிங்கநல்லூர் இடையே பெரும்பாக்கத்தில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலம் உள்ளது. இந்த சதுப்பு நிலத்தில் ஏரிபோல் தண்ணீர் தேங்கி உள்ளது. நடுவே கோரை புற்கள் ஆள் உயரத்திற்கு வளர்ந்து உள்ளது.

சில இடங்களில் அவை காய்ந்தும் இருந்தன. மேலும் சதுப்பு நில பகுதியில் உயர் அழுத்த மின்சார வயர்கள் செல்கிறது. இந்நிலையில் நேற்று இரவு சதுப்பு நிலத்தின் நடுவில் வளர்ந்து உள்ள கோரை புற்களில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ மளமளவென பரவி சுமார் அரை கிலோ மீட்டர் பரப்பளவிற்கு பரவி எரிந்தது. இதையடுத்து அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தந்தனர். பள்ளிக்கரணை வனத்துறை அதிகாரிகளும் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்தனர்.

சதுப்பு நிலத்தின் நடுவே ஏரிபோல் தண்ணீரும் உள்ளதால் தீப்பிடித்து எரியும் பகுதிக்கு சென்று தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் சதுப்பு நிலத்தின் நடுவே சென்று தீயை எப்படி அணைப்பது என அதிகாரிகள் ஆலோசனை செய்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்து கோடை வெயிலால் நடந்ததா அல்லது உயர் அழுத்த மின் கம்பிகளில் தீப்பொறி பட்டு ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

The post சென்னையில் பெரும் பரபரப்பு: பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் பயங்கர தீ appeared first on Dinakaran.

Tags : Chennai ,Purumbakkam ,Velachery ,Perumbakkam ,Choshinganallur ,
× RELATED கோட்டை ரயில் நிலையம் – வேளச்சேரிக்கு...