×

மது விற்ற 2 பேர் கைது

 

குளத்தூர், மே 31: குளத்தூர் எஸ்ஐ முத்துராஜா மற்றும் போலீசார், குளத்தூர் ஐந்து வீட்டு காலனி குறிஞ்சிநகர் பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது மாமுநைனார்புரம் தெற்கு தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் சங்கர்(32) என்பவர் மது விற்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் குளத்தூர் நந்தவனப்பகுதியில் ரோந்து சென்ற போது அப்பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த விருசம்பட்டி நடுத்தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் முனியாமி(40) என்பவரை கைது செய்த போலீசார், 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மது விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kulathur ,SI Muthuraja ,Kurinjinagar ,Marimuthu ,Shankar ,Mamunainarpuram South Street ,
× RELATED மரக்கன்று நட இடம் தேர்வு