தஞ்சாவூர், மே 31: பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு இல்லாத நிலை இருந்து வருவதால் இதைப் போக்குவதே மனித உரிமை செல் அமைப்பின் முக்கிய பணியாகும் என்று அதன் தஞ்சை மாவட்ட தலைவர் சுபைதா பேகம் தெரிவித்தார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் மனித உரிமை செல் அமைப்பின் தஞ்சாவூர் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதனை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினர்களாக கடலூர் மாவட்ட சேர்மன் கண்ணன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைப்பின் துணைத் தலைவர் ஆசாத் தாஸ், மாவட்ட பொதுச்செயலாளர் வள்ளிக்கொடி, அமைப்புச் செயலாளர் கவிதா, பொருளாளர் சுபாஷினி, மாவட்ட ஊடக செயலாளர் பிரீத்தா பீனிஷ், சட்டச் செயலாளர் ஹெலன் ரோஸ் மற்றும் திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை மதுரை, நாகப்பட்டினம் மாவட்ட தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மனித உரிமை செல் அமைப்பின் மாவட்ட தலைவர் சுபைதா பேகம் கூறுகையில், மனித உரிமை அமைப்பின் பயன்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி விளக்கி கூறினார். மேலும் நகர், கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, சீண்டல் மற்றும் குழந்தை திருமணம் ஒழிப்பு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. இதனை ஹியூமன் ரைட்ஸ் செல் அமைப்பின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி கொடுப்பது முக்கிய பணி ஆகும். மேலும் சட்ட ரீதியான உதவிகளையும் இந்த அமைப்பு செய்யும். பொது மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள எப்பொழுதும் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.
The post கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் மனித உரிமைகள் செல் அமைப்பு நிர்வாகி தகவல் appeared first on Dinakaran.