×

2 ஆம்புலன்ஸ்கள் இயக்க தடை விதித்த அதிகாரிகள்

 

திருச்செங்கோடு, மே 31: திருச்செங்கோட்டில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் பாமா பிரியா மற்றும் திருச்செங்கோடு டவுன் போலீசார் இணைந்து, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை முன்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர். தணிக்கையின் போது தகுதிச்சான்று சான்று முடிவடைந்தது, காப்பீட்டுச் சான்று முடிவடைந்தது, உரிய சாலை வரி செலுத்தாதது போன்றவை ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதில் 2 ஆம்புலன்ஸ்கள் பறிமுதல் செய்து, திருச்செங்கோடு டவுன் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மற்ற ஆம்புலன்ஸ் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அனுமதி இல்லாத இடத்தில் நிறுத்தக்கூடாது, உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று நிறுத்த வேண்டும், நோயாளிகளிடம் உரிய நியாயமான கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி ஆம்புலன்ஸ் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால், மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

The post 2 ஆம்புலன்ஸ்கள் இயக்க தடை விதித்த அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,District Transport Officer ,Saravanan ,Motor ,Inspector ,Bama Priya ,Dinakaran ,
× RELATED குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி