×

மீன் வளத்துறை சார்பில் படகுகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

 

மாமல்லபுரம், மே 31: மாமல்லபுரம் அருகே படகுகள் கணக்கெடுப்பு பணியில் மீன்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவ குப்பங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மீனவர்கள் வைத்திருக்கும் படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான ஆய்வு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மீனவ குப்பங்களில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரம், வெண்புருஷம் மற்றும் கொக்கிலமேடு ஆகிய பகுதிகளில் மீனவர்கள் வைத்திருக்கும் படகுகளில் எத்தனை படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எத்தனை படகுகள் பதிவு செய்யாமல் உள்ளது. பதிவு செய்யப்பட்ட படகுகள் உரிமையாளர்களிடம் உள்ளதா அல்லது விற்பனை செய்து விட்டனரா, படகுகளை விற்று விட்டு தவறுதலாக மானியம் பெற்று பயனடைகின்றனரா, இன்ஜின்கள் சரிவர பராமரிக்கப்படுகிறதா என மீன்வளத்துறை அதிகாரிகள் குழு நேற்று முதல் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது, அக்குழுவினர் இன்ஜின்கள் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளில் பதிவெண் தெளிவாக எழுதி இருக்க வேண்டும், ஸ்டிக்கர் ஒட்டி இருக்கக் கூடாது என மீனவர்களுக்கு அறிவுறுத்தினர்.

The post மீன் வளத்துறை சார்பில் படகுகள் கணக்கெடுப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Department of Fisheries ,Mamallapuram ,Fisheries Department ,Tamil Nadu ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில் எரியாத...