×

140 இடங்களில் பாஜ வெற்றி பெறுவதே கடினம்: அகிலேஷ் பிரசாரம்

மகராஜ்கஞ்ச்: உபி மாநிலம் மகாராஜ்கஞ்ச் மக்களவை தொகுதியில் காங்கிரஸ்-சமாஜ்வாடி வேட்பாளர் வீரேந்திர சவுத்ரியை ஆதரித்து நேற்று நடந்த பேரணியில் அகிலேஷ் யாதவ் பேசினார். அவர் பேசுகையில்,‘‘ பாஜ கட்சி இந்த முறை 400 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என்று பேசி வந்தது. தற்போது 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற கோஷத்தை அவர்கள் மறந்து விட்டனர். மக்கள் கடும் கோபத்தில் உள்ளதால் அந்த கட்சியால் 140 தொகுதிகளில் வெற்றி பெறுவதே கடினம்.

மிகுந்த எதிர்பார்ப்பு காரணமாக பிரதமர் மோடிக்கு கடும் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். போட்டி தேர்வுகளின் வினாத்தாள்களை வேண்டுமென்றே கசியவிட்டு இளைஞர்களை வேலையின்றி தவிக்க விட்டுள்ளனர். இது இடஒதுக்கீட்டை பறிப்பதற்கான முயற்சியாகும். இந்தியா கூட்டணி வென்றால் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும்’’ என்றார்.

 

The post 140 இடங்களில் பாஜ வெற்றி பெறுவதே கடினம்: அகிலேஷ் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Baja ,Akilesh Prasaram ,MAHARAJGANJ ,AKILESH YADAV ,SAMAJWADI ,VERENDRA CHAUDHRY ,UBI STATE ,BAJA PARTY ,AIMING ,Dinakaran ,
× RELATED பாஜக தேசிய தலைவர் ஆகிறார் சிவராஜ் சிங் சவுகான்?.. டெல்லியில் தீவிர ஆலோசனை