×

தேர்தல் பிரசாரத்தின்போது 421 முறை மோடி பிரிவினைவாத பேச்சு: கார்கே விமர்சனம்

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கார்கே, ‘‘தற்போதைய அரசுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் அது ஜனநாயகத்தை முடிவுற செய்வதாக அமையும். ஜாதி மற்றும் மதத்தின் ரீதியாக வாக்குகளை கோரக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை மீறி, பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது கோயில், மசூதி விவகாரத்தையும் மற்றும் பிரிவினைவாத பேச்சுக்களை 421 முறை பேசியிருக்கிறார்.

கடந்த 15 நாட்களில் 232 முறை காங்கிரஸ் பெயரையும், தனது சொந்த பெயரை 758 முறையும் கூறியிருக்கிறார். வேலையில்லா திண்டாட்டம் குறித்து அவர் ஒரு முறைக்கூட பேசவில்லை. இந்தியா கூட்டணியானது அறுதி பெரும்பான்மை பெற்று அரசை அமைக்கும். ஜூன் 4ம் தேதி மக்கள் மாற்று அரசிற்கான ஆணையை வழங்குவார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

The post தேர்தல் பிரசாரத்தின்போது 421 முறை மோடி பிரிவினைவாத பேச்சு: கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,president ,Mallikarjuna Kharge ,Congress ,Delhi ,Kharge ,Karke ,
× RELATED பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி...