×

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு

புதுச்சேரி; புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான வெயில் காரணமாக விடுமுறையை நீட்டித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி, தமிழ்நாட்டில் வெப்பம் கொளுத்தி வந்த நிலையில் தற்போது பல இடங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது. கோடை மலை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரியில் அரசு பள்ளிகளுக்கு மே 1 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் கொளுத்தி வரும் கடுமையான வெயில் காரணமாக பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறையை நீட்டித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் ஜூன் 12 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் அன்று, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் பள்ளிகள் திறந்தவுடன் பாடநூல், நோட்டு, சீருடை துணி மற்றும் தையல் கூலி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry, Tamil Nadu ,
× RELATED புதுச்சேரி சிறையில் செல்போன்கள் பறிமுதல்