×
Saravana Stores

2 ராட்சத பலூன் மூலம் தென்கொரியாவில் குப்பை கொட்டி அச்சுறுத்தும் வடகொரியா

சியோல்: கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. தற்போது ஏராளமான ராட்சத பலூன்களை அனுப்பி வைத்துள்ளது. அதிலும் 2 பலூன்களை ஒன்றாக இணைத்து அதில் குப்பைகளை கட்டி அனுப்பி வைத்துள்ளது. இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ள தென்கொரியா பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளது. அந்த பலூன்கள் சுமந்து வந்த பையில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், பேட்டரிகள், ஷூ பகுதிகள், சாணம் இருந்துள்ளது.

அந்த பொருட்கள் வீடுகள், விமான நிலையங்கள் மற்றும் சாலைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம் எனவும் ரசாயன ஆயுதங்களோ வெடி பொருட்களோ இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எல்லை அருகில் அமைந்துள்ள ஜியோங்க்கி, கங்வோன் மாகாணத்தில் உள்ள உள்ளூர் அரசு நிர்வாகிகள், அடையாளம் தெரியாத பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம். அதே நேரத்தில் வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக தெளிவாக தெரிகிறது. இது, தென்கொரிய மக்களுக்கு எதிரான அச்சுறுத்தலாக உள்ளது. மனிதாபிமானமற்ற மற்றும் மிகவும் தரம்தாழ்ந்த செயலை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தென்கொரியா அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், தற்போது தரையிறங்கியுள்ள பலூன்களால் சேதம் ஏதும் ஏற்பட்டது குறித்து தென்கொரியா தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

The post 2 ராட்சத பலூன் மூலம் தென்கொரியாவில் குப்பை கொட்டி அச்சுறுத்தும் வடகொரியா appeared first on Dinakaran.

Tags : North Korea ,South ,Korea ,SEOUL ,South Korea ,Korean Peninsula ,Dinakaran ,
× RELATED வடகொரியாவுக்குள் நுழைந்ததா தென்கொரிய...