×

திருச்சி அருகே மருத்துவ சான்றிதழ் வழங்க ரூ.1000 கேட்டு அரசு டாக்டர் அடாவடி: வீடியோ வைரலால் பரபரப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மேய்க்கல் நாயக்கன்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. ஒருவர், வீட்டில் இறந்து விட்டால் அவரது இறப்புக்கான காரணத்தை கூறி, அதற்கான விண்ணப்பத்தில் மருத்துவர் சான்று அளித்தாலே உள்ளாட்சி அமைப்புகள் இறப்பு சான்று வழங்கலாம். அதன்படி மேய்கல் நாயக்கன்பட்டியில் இயற்கை மரணம் அடைந்து விட்டால் இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக அரசு மருத்துவரின் சான்றிதழுக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவரை அணுகுவர்.

அதன்படி நேற்று மேய்க்கல் நாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட ஒருவர் இறந்துவிட்ட நிலையில், அவரது உறவினர்கள் பணியில் இருந்த அரசு மருத்துவர் ராமச்சந்திரனை அணுகி இறந்து போனவரின் இறப்புக்கு சான்றிதழ் பெற, மருத்துவ சான்றிதழ் வழங்குமாறு கேட்டனர். அதற்கு மருத்துவர் ராமச்சந்திரன் இறந்தவர் எப்படி இறந்தார். ரூ.1000 கொடுத்தால் மட்டுமே இறப்பு சான்றிதழ் வழங்க முடியும். நான் இங்கு சான்றிதழ் வழங்குவதற்காக பணியாற்றவில்லை. அது எனது வேலை இல்லை.

நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சென்று சொல்லிக் கொள்ளுங்கள் என கறாராக பேசுவதுடன், பணம் தராவிட்டால் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் அவர் மரணம் இயற்கையானது என்று எழுதி வாங்கி வாருங்கள். அல்லது இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்திருந்தால் மட்டுமே நான் இறப்புச் சான்றிதழ் பெற சான்று வழங்க முடியும் என்று பேசுகிறார். இதை உடன் சென்ற உறவினர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார். இறப்பு சான்றிதழ் வழங்க அரசு மருத்துவர் பணம் கேட்டு அடாவடியாக பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

The post திருச்சி அருகே மருத்துவ சான்றிதழ் வழங்க ரூ.1000 கேட்டு அரசு டாக்டர் அடாவடி: வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Govt. ,Dr. ,Adavadi ,Trichy ,Meikal Nayakkanpatti ,Thaniyam ,
× RELATED ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர்...