×

அதிக லாபம் தருவதாக 86 பேரிடம் 4 கோடி ரூபாய் மோசடி: ஸ்வர்ணதாரா குழுமத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது

சென்னை: அதிக லாபம் தருவதாக நம்பவைத்து பொதுமக்களிடம் சுமார் 4 கோடி ரூபாய் வரை மோசடி செய்த விவகாரத்தில் சென்னை ஸ்வர்ணதாரா குழுமத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தங்கம் மற்றும் டெரிவேட்டிவ் வர்த்தகம் செய்வதாக குறிப்பிட்டு அதில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஆண்டு தோறும் 100 சதவீதம் லாப தொகை கிடைக்கும் என்று சென்னையை சேர்ந்த ஸ்வர்ணதாரா என்ற நிறுவனம் விளம்பரம் செய்தது. 3வருடத்திற்கு பிறகு முதலீடு செய்த முழு தொகையையும் கிடைக்கும் என்று ஸ்வர்ணதாரா நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டது.

இதனை நம்பி அந்நிறுவனத்தில் 86 பேர் பலலட்சம் ரூபாய் முதலீடு செய்தனர். ஆனால் கூறியவாறு முதலீட்டு பணத்தையும் தராமல் அவர்கள் ஏமாற்றுவது தெரியவந்தது. இதை அடுத்து புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்படி நொளம்பூர் பகுதியை சேர்ந்த ஸ்வர்ணதாரா நிறுவனத்தின் சேர்மன் வெங்கட ரங்க குப்தா மற்றும் நிர்வாக இயக்குனர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் 44 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post அதிக லாபம் தருவதாக 86 பேரிடம் 4 கோடி ரூபாய் மோசடி: ஸ்வர்ணதாரா குழுமத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : SWARNATARA GROUP ,Chennai ,Chennai Swarnatara Group ,United States ,Australia ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...