×

டி.டி.எஃப். வாசன் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு

மதுரை: யூடியூபர் டி.டி.எஃப் வாசன் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக டி.டி.எஃப். வாசன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். வேகமாக வாகனம் ஓட்டுதல், சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் 21கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் ஒரு பிரிவாக, பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் ஒரு காரியத்தை செய்தல் (308) என்ற பிரிவும் சேர்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் மூலம் டிஎஃப் வாசன் உடனடியாக ஜாமீனில் வர முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

The post டி.டி.எஃப். வாசன் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : D. D. F. Vasan ,Madurai ,T. D. F VASSAN ,T. ,D. F. VASSAN ,D. D. F. ,Vasan ,Dinakaran ,
× RELATED மதுரை காமராஜர் பல்கலை. பதிவாளர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை ஆணை..!!