×

முதலிடத்திற்கு முன்னேற்றம்: நார்வே செஸ் போட்டியில் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

ஒஸ்லோ: நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். கிளாசிகல் போட்டியில் முதன்முறையாக கார்ல்சனை வீழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டியின் 3-வது சுற்றில் பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றார். நார்வே செஸ் தொடரில் 3 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார்.

கார்ல்சன் 3 புள்ளிகளுடன் பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளார். 2வது சுற்றில் உலக சாம்பியன் டிங் லீரனிடம் தோற்ற நிலையில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். நார்வே செஸ் போட்டியில் மொத்தம் 10 சுற்றுகள் உள்ளன.3 சுற்றுகள் முடிவில் முதலிடம் பிடித்த நிலையில் நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்ல பிரக்ஞானந்தா முனைப்பு காட்டி வருகிறார்.

The post முதலிடத்திற்கு முன்னேற்றம்: நார்வே செஸ் போட்டியில் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா appeared first on Dinakaran.

Tags : Pragnananda ,Carlsen ,Oslo ,Norway ,Tamil Nadu ,Carlson ,Dinakaran ,
× RELATED டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர்...