×

தீக்குளித்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி

ஸ்பிக்நகர், மே 30: முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஞானமுத்து(48). மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி. இவர், மனைவி குழந்தைகளுடன் முத்தையாபுரத்தில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு உடலில் டீசல் ஊற்றி தீக்குளித்துள்ளார். 55 சதவீத தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஞானமுத்து உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post தீக்குளித்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Spignagar ,Gnanamuthu ,Muthiyapuram North Street ,Muthiyapuram ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED முள்ளக்காடு பகுதியில் மீனவரை தாக்கிய இருவர் கைது