×

தேசிய கிக் பாக்ஸிங் போட்டி தமிழக வீரர்கள் சாதனை

 

வேலாயுதம்பாளையம், மே 30: மகாராஷ்டிரா மாநிலம் புனே சத்ரபதி சிவாஜி விளையாட்டு அரங்கில் கடந்த மே 22 முதல் 26ம் தேதி வரை தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அணியினர் கலந்து கொண்டு விளையாடினார்கள். இதில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. இதில் மாணவி சௌபாக்கியா வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

மாணவர் தரணிஷ் கால் இறுதி வரை முன்னேறினார். இருவரும் முன்னதாக மே 3ம் தேதி சென்னை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாநில போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்களை கரூர் மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் மணியன், செயலாளர் ரவிக்குமார், துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள்.

 

The post தேசிய கிக் பாக்ஸிங் போட்டி தமிழக வீரர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : National kickboxing tournament ,Velayuthampalayam ,Chhatrapati Shivaji Stadium ,Pune, Maharashtra ,National Kickboxing Competition Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தேசிய கிக் பாக்ஸிங் போட்டியில் வென்ற அரசு பள்ளி மாணவருக்கு வரவேற்பு