×

கறம்பக்குடி அருகே தைல மரக்காடு தீயில் எரிந்து சேதம்

 

கறம்பக்குடி, மே 30: கறம்பக்குடி அருகே தைல மரக்காடு தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சுக்கிரன் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரன். விவசாயி. இவருக்கு சொந்தமான தைலம் மரக்காடு நேற்று மாலை தீப்பற்றி எரிவதாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தைல மரக்காடு முழுவதும் தீப்பற்றி எரிவதற்குள் தீயை அணைத்து தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
தீயை அணைத்த தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

The post கறம்பக்குடி அருகே தைல மரக்காடு தீயில் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Karambakudi ,Sukran Uddham village ,Karambakkudi ,Pudukottai ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி அருகே உளுந்து பயிரில் மஞ்சள் அழுகல் நோய்