×

1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விருதுநகர், மே 30: விருதுநகர் அருகே 1.5 டன் ரேஷன் அரிசியை கடத்தியதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குல்லூர்சந்தையில் உள்ள மேற்கு தெருவில் நின்று கொண்டிருந்த வாகனத்தை சோதனையிட்டனர். அதில் 50 கிலோ எடையுள்ள 30 மூட்டைகளில் 1500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, சூலக்கரையை சேர்ந்த பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.

The post 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Food Smuggling Unit ,Gullur Chandi ,Dinakaran ,
× RELATED 2,050 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது