×

மழையால் கொள்முதல் இல்லை பப்பாளி பழுத்து உதிரும் அவலம்: விவசாயிகள் வேதனை

சின்னமனூர், மே 30: சின்னமனூர் பகுதியில் பரவலாக கோடை மழை பெய்தததல், பப்பாளி காய்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருகை குறைந்தது. இதனால் அவை மரங்களில் இருந்து பழுத்து உதிர்வதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சின்னமனூர் பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் ஆண்டுதோறும் இருபோகம் நெல் சாகுபடி நடக்கிறது. இதற்கிடையே சின்னமனூர் அருகே முத்தலாபுரம், சின்னஓவலாபுரம் கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், ஊத்துப்பட்டி, பெருமாள்பட்டி, கரிச்சிப்பட்டி, அப்பபட்டி, ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் பலரும் தனி மற்றும் ஊடுபயிராக பப்பாளி பயிரிட்டுள்ளனர்.

இதன்படி ஒரு ஏக்கர் நிலத்தில் ஆறுக்கு ஆறு நீள அகலத்தில் சுமார் 800 முதல் 900 வரையிலான பப்பாளி கன்றுகள் நடப்பட்டு தொடர் பராமரிப்பில் இருந்து வருகிறது. அவற்றின் வளர்ச்சிக்கு தேவயைான பயோமெட்ரிக் உரங்கள் அளித்தும், நோய் பாதுகாப்பினை தடுத்தும் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். இதன்படி ஏக்கருக்கு விவசாயிகள் ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். ஒரு பப்பாளி மரம் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து பலன் தரும் என்பதுடன், இப்பகுதியில் பயன்படுத்தும் இயற்கை உரங்களால் ஒவ்வொரு பப்பாளியு் ஒன்றரை முதல் இரண்டரை கிலோ வரையில் எடையுள்ளதாக இருக்கிறது. இந்த பப்பாளி கோடைகாலத்தில் அதிக அளவில் விற்பனையாவது வழக்கம். இதன்படி, தற்போது ஒரு கிலோ 10 ரூபாய் என, வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இதற்கிடையே கோடை மழை தொடர்ந்ததால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெயில் மிகவும் குறைவாக உள்ளது.

இதனால் அவற்றை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை. இதன் எதிரொலியாக, தற்போது பப்பாளி மரங்களிலேயே பழுத்து உதிர்ந்து வீணாகி வருகிறது. வழக்கமாக ஒரு ஏக்கரில் சுமார் ஏழு டன் வரை பப்பாளி உற்பத்தியாகும். ஆனால் தற்போது கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரத்தின்றி அவை வீணாவது விவசாயிகளை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே தங்களுக்கு அரசுதரப்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னமனூர் மற்றும் சுற்றுப்பகுதியில் பப்பாளி விவசாயம் செய்து கொள்முதல் செய்ய ஆளில்லாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கூறும்போது, ‘‘வழக்கமாக பப்பாளி விவசாயத்தில் போதிய அளவு லாபம் கிடைக்கும்.

ஆனால் இந்த ஆண்டு மழை காரணமாக வியாபாரிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளதால் பழங்கள் அழுகி உதிர்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு அரசு தரப்பில் போதிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றனர்.

ஓய்வெடுக்கும் வைகை அணை…
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களின் பாசனை தேவைக்காக சமீபத்தில் தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 47.64 அடியாக இருந்தது. இதன் எதிரொலியாக, அப்பகுதியில் வீசும் காற்றில் அலையும் அலைகளுடன் ஓய்வெடுத்து வருகிறது.

The post மழையால் கொள்முதல் இல்லை பப்பாளி பழுத்து உதிரும் அவலம்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,
× RELATED சின்னமனூர் பகுதிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு