×

சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக47 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்: சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை, மே 30: வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு சென்னை ரிப்பன் கட்டிடத்தில் நேற்று முதல்கட்ட பயிற்சி நடத்தப்பட்டது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு வாக்கு எண்ணும் மையங்களில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பதற்றம் அடையாமல், விவேகத்துடன் செயல்பட வேண்டும் எனவும், எவ்வித தவறுகளும் இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.

இதுகுறித்து நிருபர்களுக்கு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்று மக்களவை தொகுதிகளையும் சேர்த்து 357 நுண் பார்வையாளர்கள், 374 மேற்பார்வையாளர்கள், 322 அலுவல உதவியாளர்கள், 380 உதவியாளர்கள் என மொத்தமாக 1433 பேர் பணிகளில் ஈடுபட உள்ளனர். 47 தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் 922 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வடசென்னையில் சட்டமன்ற தொகுதிவாரியாக 14 மேஜைகள், மத்திய சென்னையில் 14 மேஜைகள், தென்சென்னையில் சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 30 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். மொத்தம் 268 மேஜைகள் மூலம் மூன்று நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. 321 சுற்றுகளாக எண்ணப்படுகிறது.

வடசென்னை 16, தென்சென்னை 16, மத்திய சென்னையில் 15 என 47 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டாலும் இறுதிச் சுற்றுக்கு பிறகுதான் எண்ணிக்கை விவரம் அறிவிக்கப்படும். மீண்டும் ஜூன் 3ம் தேதி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 4ம் தேதி காலை 5 மணிக்கு எந்தெந்த மேஜையில் யார் யார் பணியாற்றுவர் என்பதை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அறிவிக்கப்படும்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

The post சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக47 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்: சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,District ,Radhakrishnan ,Chennai, ,Ribbon Building ,
× RELATED சென்னையில் உள்ள வாக்கு எண்ணும்...